செய்திகள்
நாதன் லயன்

நாதன் லயனுக்கு காயம்: கவலையில் ஆஸ்திரேலிய அணி

Published On 2019-08-28 11:50 GMT   |   Update On 2019-08-28 15:11 GMT
கால்பந்து விளையாடும்போது காலில் காயம் ஏற்பட்டதால், நாதன் லயன் ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் அடுத்த மாதம் 4-ந்தேதி ஓல்டு டிராபோர்டில் நடக்கிறது. தற்போது ஆஸ்திரேலியா மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

இதற்கான பயிற்சியின்போது ஆஸ்திரேலியா வீரர்கள் கால்பந்து விளையாடினர். அப்போது நாதன் லயனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் 4-வது டெஸ்டில் நாதன் லயன் விளையாடவில்லை என்றால், அது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

இதுவரை முடிந்து மூன்று போட்டிகளில் நாதன் லயன் 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். பேட் கம்மின்ஸ் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளா்ர என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News