செய்திகள்
ஆஸ்டின் எம்எல்ஏ

பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பாவிட்டால் மறியல் போராட்டம்- ஆஸ்டின் எம்எல்ஏ

Published On 2019-11-05 16:20 GMT   |   Update On 2019-11-05 16:20 GMT
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பாவிட்டால் திமுக சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஆஸ்டின் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
நாகர்கோவில்:

தி.மு.க.வை சேர்ந்த ஆஸ்டின் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திற்கு ஒற்றையால்விளை வழியாக பாபநாசம் கால்வாய் மூலம் தண்ணீர் வருவது உண்டு. தற்போது கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் தண்ணீர் வரவில்லை. கால்வாயை தூர்வார வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

எனவே இன்னும் 10 நாட்களுக்குள் கால்வாயை தூர்வாரி, ஒற்றையால்விளையில் இருந்து பாபநாசம் கால்வாய் வழியாக பகவதியம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும். இல்லையென்றால் தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி விவேகானந்தபுரம் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News