ஆன்மிகம்
பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் அழகர். பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி காய்கறி தானம் வழங்கிய காட்சி.

மானாமதுரையில்வீர அழகர் பச்சைப்பட்டு உடுத்தி கோவிலில் எழுந்தருளினார்

Published On 2021-04-28 03:43 GMT   |   Update On 2021-04-28 03:43 GMT
மானாமதுரையில் வீர அழகர் பச்சைப்பட்டு உடுத்தி கோவிலில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவில் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை வீர அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சித்திரை திருவிழா நடைபெறவில்லை.

இதே போல் இந்த ஆண்டும் தமிழக அரசு விதித்துள்ள தடையால் தினந்தோறும் கோவில் உள்பகுதியில் சாமி வலம் வந்தார்.இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான எதிர்சேவை நிகழ்ச்சிக்காக வீர அழகர் கள்ளழகர் வேடம் அணிந்து கோவிலுக்கு உள்ளேயே வலம் வந்தார்.

வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சிக்கு தடையால் கள்ளழகர் வேடம் பூண்ட வீர அழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கோவிலில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடைபெற்றது.

சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோவில் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கோவில் வெளியே கிடா வெட்டியும், வைகை ஆற்றில் முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். பிறகு அரிசி காய்கறிகள் தானமாக வழங்கினர்.
Tags:    

Similar News