செய்திகள்
கைது

மேகமலை வனப்பகுதியில் கடமானை வேட்டையாடிய 2 பேர் கைது

Published On 2021-11-28 09:37 GMT   |   Update On 2021-11-28 09:37 GMT
மேகமலை வனப்பகுதியில் கடமானை வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வருசநாடு:

தேனி மாவட்டம் மேகமலை வனச்சரகத்துக்குட்பட்ட சின்ன சுருளி பகுதியில் மான், யானை, சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு நாய்கள் மூலம் கடமான்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மேகமலை வனச்சரகர் சதீஸ்குமார் தலைமையில் வனவர் சேதுநாராயணன், வனக்காப்பாளர் அழகர்சாமி மற்றும் ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது சின்னச்சுருளி ஓடைப்பகுதியில் சிலர் நாய்களுடன் வந்துள்ளனர்.

அவர்களை சுற்றி வளைத்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் இறைச்சிக்காக கடமான்களை வேட்டையாடியது தெரியவந்தது. இதற்காக வேட்டை நாய்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இறைச்சியை எடுத்து விட்டு கழிவுகளை அதே பகுதியில் புதைத்து வைத்திருந்தனர். இது தொடர்பாக கோம்பைத் தொழுவைச் சேர்ந்த வினோத்குமார், சுசீந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News