ஆன்மிகம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணித்து வரும் காட்சி.

15 மாதங்களாக கிரிவலம் செல்ல தடை: இம்முறையும் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள்

Published On 2021-06-24 05:33 GMT   |   Update On 2021-06-24 15:19 GMT
இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.55 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி  கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மாத பவுர்ணமிக்கும் பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

கடந்த 15 மாதங்களாக திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமிகிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். அடுத்த
பவுர்ணமி
க்காவது கிரிவலம் செல்ல அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

அதே போல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி மாதம் நடைபெறும் பவுர்ணமிகிரிவலம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமிகிரிவலம் சிறப்பு வாய்ந்ததாகும்.
Tags:    

Similar News