செய்திகள்
கைது

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2½ கோடி மோசடி செய்த வழக்கில் 2 தம்பதிகள் உள்பட 5 பேர் கைது

Published On 2021-01-23 12:08 GMT   |   Update On 2021-01-23 12:08 GMT
திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2½ கோடி மோசடி செய்த 2 தம்பதிகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி இ.பி.ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 40). பழவியாபாரி. அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி (70) மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி தன்னிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஜெயசந்திரன் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் பழனிசாமி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பழனிசாமியின் மகள் மஞ்சுளா (40), அவரது கணவர் சித்திரவேல் (45), பழனிசாமியின் இன்னொரு மகள் விஜயலட்சுமி (35), அவரது கணவர் சரவணன் (40) மற்றும் சுமதி ராணி (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பழனிசாமி குடும்பத்தினர் இதேபோல் பலரிடம் ரூ. 2½ கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News