உள்ளூர் செய்திகள்
அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் வழங்கிய கலெக்டர் சமீரன்.

கோவையில் கோவில் பணியாளர்களுக்கு ரூ.23 லட்சம் மதிப்பில் சீருடைகள்

Published On 2022-01-12 11:06 GMT   |   Update On 2022-01-12 11:06 GMT
பொங்கலையொட்டி கோவில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
கோவை:

தமிழக அரசு சட்டசபை கூட்டத்தொடரின் போது இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது.

அதன்படி கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவை கலெக்டர் சமீரன் முன்னிலை வகித்தார். இதில் அர்ச்சகர்கள்,  பட்டாச்சா ரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை கலெக்டர் சமீரன் வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகள் என மொத்தம் 429 பேருக்கு புத்தாடைகளும், கோவில்களில் பணிபுரியும் பணியாளர்களில் 352 ஆண்களுக்கும், 110 பெண்களுக்கும் சீருடைகளும் வழங்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் மொத்தமாக 1091 பேருக்கு ரூ.23 லட்சத்து 2 ஆயிரத்து 450 மதிப்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் மருதமலை, பேரூர் கோவில்களின் துணை ஆணையர் விமலா, ஈச்சனாரி கோவில் உதவி ஆணையர் ஆனந்த், கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News