செய்திகள்
கோப்புபடம்

வாலிபரை கைது செய்யக்கோரி திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தை கிராமமக்கள் முற்றுகை

Published On 2020-01-11 12:30 GMT   |   Update On 2020-01-11 12:08 GMT
வாலிபரை கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கும்பகோணம்:

திருவிடைமருதூர் அருகே குறிச்சிமலை புது தெருவில் வசிக்கும் இளைஞர்கள் அப்பகுதியில் அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதற்காக கடந்த 7-ந் தேதி அதே பகுதியில் கொட்டகை அமைத்து வந்தனர். அப்பகுதியில் ஒரு சில இடங்கள் திருமங்கலக்குடியைச் சேர்ந்த ஆதிகேசவன் மகன் பாபு என்கிற செந்தூரபாண்டி பவர் ஏஜெண்டாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

அம்பேத்கர் படிப்பகத்தில் செல்போன் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்து பாபுவின் ஆட்கள் கொடுத்துள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த பாபு குறிச்சிமலை புது தெருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22) பார்த்திபன் (24) ஆகியோரை துப்பாக்கி முனையில் இளைஞரை முட்டி போட வைத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்பு இருவரையும் தாக்கியதில் பலத்த காயமடைந்த சுரேஷ் மற்றும் பார்த்திபன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பாபுவை கைது செய்ய வலியுறுத்தி திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வெண்மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு முற்றுகையிட்டனர்.

பின்னர் கிராம மக்கள் கோரிக்கை ஏற்று திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பாபு மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றார்.

இதையடுத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் திருவிடைமருதூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News