செய்திகள்
கோப்புபடம்

நிலக்கடலை விதைப்பண்ணையில் கலெக்டர் வினீத் ஆய்வு

Published On 2021-09-10 06:32 GMT   |   Update On 2021-09-10 06:32 GMT
தரமான பிற ரக கலப்பற்ற நல்ல விதைகள் விவசாயிகள் பெற ஏதுவாக பணிபுரிய வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டாரத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் விதை தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் நிலக்கடலை  விதை பண்ணையானது 130 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முதிர்ச்சி பருவத்தில் கந்தசாமி என்பவரது நிலக்கடலை விதை பண்ணையை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

நிலக்கடலை தரணி ரகமானது குறைந்த நாட்களில் (105 நாட்கள்) அதிக மகசூல் தரவல்லது. இந்த ரகத்தில் ஏக்கருக்கு 1 மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும். இந்த ரகத்தின் குணாதிசயங்கள் பற்றி கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் விதை சான்று அலுவலர் ஆய்வு மேற்கொள்ளும்போது  விதை தரத்தில் எந்த வித குறைபாடும் ஏற்படா வண்ணம் ஆய்வு மேற்கொண்டு தரமான பிற ரக கலப்பற்ற நல்ல விதைகள் விவசாயிகள் பெற ஏதுவாக பணிபுரிய வேண்டும்.

விதை பற்றாக்குறை ஏற்படாதவாறு தரமான விதை கிடைத்திட வழிவகை  செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து பிற ரக கலவன் நீக்கம் குறித்து விதைசான்று அலுவலர் கவிதா எடுத்து கூறினார்.

ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு, உதவி விதை ஆய்வாளர் தனபால் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News