லைஃப்ஸ்டைல்
நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா?

நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா?

Published On 2019-10-25 06:09 GMT   |   Update On 2019-10-25 06:09 GMT
குழந்தைக்கு நம்மை போல் அனைத்து திட உணவுகளையும் கொடுக்க முடியாது. இங்கு நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா என்று பார்க்கலாம்.
குழந்தை பிறந்த உடன் அவர்களுக்கென அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். குழந்தை பிறந்த முதல் சில மாதங்களில், அவர்களுக்கு சரியான திட உணவை கொடுக்கிறார்களா என்றால் சந்தேகம் தான். குழந்தைக்கு நம்மை போல் அனைத்து திட உணவுகளையும் கொடுக்க முடியாது. இங்கு நீங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு சரியானதுதானா என்று பார்க்கலாம்.  

குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாத காலம் வரை தாய்ப்பால் மற்றும் ஃபார்முலா பால் மட்டும் கொடுப்பதே சிறந்தது. 6 மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு திட உணவுகளை பழக்கப்படுத்துவது முக்கியமான ஒன்று. இது உங்கள் குழந்தையின் விருப்பத்தை சார்ந்தே இருக்க வேண்டும். குழந்தை விரும்பி உண்ணும் திட உணவுகளை கொடுங்கள். உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்கும் முன், என்ன உணவுகளை எப்போது கொடுக்க வேண்டும் என்பதை திட்டமிடுங்கள். திட உணவை கொடுக்க துவங்கும் போது, மென்மையான காய்கறிகள் மற்றும் பழங்களை சிறிது சிறிதாக கொடுக்க துவங்குங்கள்.

குழந்தைக்கு அந்த உணவின் சுவை பிடிக்கும் வரை அவர்கள் சாப்பிடுவது கடினம் தான். உணவின் சுவையை அவர்களுக்கு பழக்கப்படுத்துங்கள். குழந்தையின் உணவில் இனிப்பை சேர்த்து கொடுக்கும் போது அவர்கள் விரும்பி உண்வார்கள். பால் அல்லது தண்ணீரில் பிஸ்கெட்டை உறவைத்து கொடுக்கலாம்.

திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்கும் முன், பழங்களை மசித்து அதன் சுவையை குழந்தைக்கு பழக்கப்படுத்துவது சிறந்தது. பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். குழந்தைகளுக்கு பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை கொடுக்கும் முன், மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது. சில உணவுகள் குழந்தைகளுக்கு ஓவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் இது பரிந்துரைக்க படுகிறது. குழந்தைகளுக்கு மென்மையான மற்றும் சுவையான உணவுகளை வெவ்வேறு வண்ணங்களில் கொடுப்பது, அவர்களின் கவனத்தை உணவின் பக்கம் திருப்பும்.

காய்கறிகள் மற்றும் இறைச்சி குழந்தைகளின் தசை மற்றும் எலும்புகள் வளர்ச்சியடையவும், வலிமைப்படுத்தவும் உதவுகின்றன. இரும்பு சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்கவும். குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவை பட்டியலிட்டு கொள்வது இதற்கு உதவும். இறைச்சியில் நிறைந்திருக்கும் புரதம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காய்கறிகளும், இறைச்சியும் வெவ்வேறாக இருந்தாலும், குழந்தைகள் உடலின் வெவ்வேறு பாகங்கள் வளர்ச்சியடைய உதவுகின்றன.

குழந்தையின் உணவு அட்டவணையில் மறக்காமல் பால் பொருட்களையும் சேர்த்து கொள்ளுங்கள். பாலாடைக்கட்டி, பன்னீர் மற்றும் பாலில் நிறைந்திருக்கும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் வலிமையான பற்களின் வளர்ச்சிக்கு உதவும். குழந்தை பருவத்திலேயே அவர்களின் எலும்பு மண்டலம் நன்கு வளர்ச்சியடைய வேண்டும். குழந்தையின் வளர்ச்சி உங்களை சார்ந்திருப்பதால், அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை திட்டமிட்டு அட்டவணைப்படுத்தி கொடுங்கள்.  
Tags:    

Similar News