தொழில்நுட்பச் செய்திகள்
போர்டிரானிக்ஸ் ஜெனிசிஸ்

மிகக் குறைந்த விலையில் புது கேமிங் ஹெட்செட் அறிமுகம்

Published On 2022-05-10 06:06 GMT   |   Update On 2022-05-10 06:06 GMT
போர்டிரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய கேமிங் ஹெட்செட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


போர்டிரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கேமிங் ஹெட்செட் ஜெனிசிஸ் என அழைக்கப்படுகிறது. கேமிங் ப்ரியர்களின் கேமிங் திறமையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஜெனிசிஸ் ஸ்மார்ட் ஹெட்செட் உருவாக்கப்பட்டு இருப்பதாக போர்டிரானிக்ஸ் தெரிவித்து உள்ளது. 

சமீபத்தில் 'டாக் ஒன்' எனும் பெயரில் போர்டபில் வயர்லெஸ் கான்பரன்ஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்த நிலையில் தற்போது கேமிங் ஹெட்செட் மாடலை போர்டிரானிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய ஜெனிசிஸ் மாடல் தொடர்ச்சியாக கேமிங் செய்வோருக்கு ஏற்ப கச்சிதமாக உருவாக்கப்பட்டு உள்ளது. அசத்தலான ஸ்டைல் மட்டுமின்றி அதிக உறுதியுடன் இந்த ஹெட்செட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய சேசிஸ் இந்த ஹெட்செட்டில் வழங்கப்பட்டு இருக்கிறது. 



மெட்டல் மற்றும் பாலிகார்போனேட் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த ஹெட்செட் உறுதியுடன் இருப்பதோடு எளிதில் வளைக்கும் தன்மையையும் கொண்டிருக்கிறது. இதில் உள்ள மெமரி ஃபோம் ஹெட் குஷன் மற்றும் இயர் கஃப்கள் நீண்ட நேரத்திற்கு பயன்படுத்தும் போதும், அதிக சவுகரியமான அனுபவத்தை வழங்கும். மேலும் இது இடையூறை ஏற்படுத்தாது. 

ஜெனிசிஸ் ஸ்மார்ட் கேமிங் ஹெட்செட்டில் 40mm டிரைவர்கள் உள்ளன. இவை சீரான ஆடியோவை எவ்வித இரைச்சலும் இன்றி வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த ஹெட்செட் FPS ரக கேம்களை விளையாடும் போது சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதில் உள்ள கஸ்டமைஸ் செய்யக் கூடிய ஆம்னி டைரெக்‌ஷனல் மைக்ரோபோன், பேக்கிரவுண்ட் சத்தத்தை போக்குகிறது.

புதிய போர்டிரானிக்ஸ் ஜெனிசிஸ் ஸ்மார்ட் கேமிங் ஹெட்செட் மாடல் பிளாக், கிரே மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஜெனிசிஸ் ஸ்மார்ட் கேமிங் ஹெட்செட் அறிமுக சலுகையாக ரூ. 1099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை போர்டிரானிக்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் முன்னணி ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனையாளர்களிடம் நடைபெறுகிறது. 
Tags:    

Similar News