தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் டீசர்

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு

Published On 2020-06-24 05:30 GMT   |   Update On 2020-06-24 05:30 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.



ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பொது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும், பலரும் வாங்கக்கூடிய வகையில் குறைந்த விலையில் இருக்கும் என ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்தார்.

முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்பின் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கும் குழுவினை, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை உருவாக்கிய குழுவினை வழிநடத்திய பால் யு தலைமை வகிக்கிறார்.

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனினை விளம்பரப்படுத்த இன்ஸ்டாகிராம் தளத்தில் OnePlusLiteZThing எனும் பெயரில் புதிய அக்கவுண்ட் ஒன்றை துவங்கி உள்ளது. இதனால் புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் இசட் பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர 64 எம்பி+16 எம்பி+2 எம்பி கேமரா சென்சார்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News