செய்திகள்
திருமாவளவன்

குழந்தை சுர்ஜித்தின் பெற்றோருக்கு திருமாவளவன் எம்பி ஆறுதல்

Published On 2019-10-27 11:47 GMT   |   Update On 2019-10-27 11:47 GMT
திருச்சி அருகே நடுகாட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்து திருமாவளவன் எம்பி ஆறுதல் கூறினார்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

அவனை மீட்கும் பணிகள் சுமார் 50 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடுகாட்டுப்பட்டிக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த திருமாவளன் கூறியதாவது:-

சுர்ஜித்தை மீட்க அரசு தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க இதுவரை கருவி கண்டுபிடிக்கப்படாதது அறிவியலுக்கு விடப்பட்ட சவால். குழந்தையை  மீட்க இன்னும்  பல மணி நேரம் ஆகும் என்பது வேதனை அளிக்கிறது. இந்த நகழ்வரை எந்த வகையிலும் ஜீரணிக்க முடியாது. 

சுஜித் உயிரோடும் மீட்கவில்லை என்றால் நாம் ஒவ்வொருவரும் வெட்கி தலைகுணிய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க மத்திய , மாநில அரசுகள் கடமையாற்ற வேண்டும். ஆழ்துளை கிணறு தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவோம். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News