செய்திகள்
வெற்றிக் கோப்பையுடன் பாகிஸ்தான் அணி

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என கைப்பற்றியது பாகிஸ்தான்

Published On 2021-04-25 22:36 GMT   |   Update On 2021-04-25 22:36 GMT
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், மொகமது ரிஸ்வான் 91 ரன் அடிக்க, ஹசன் அலி 4 விக்கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஹராரே:

பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி ஹராரேயில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான மொகமது ரிஸ்வான் அதிரடியாக ஆடி 91 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேப்டன் பாபர் அசாம் 52 ரன்னில் வெளியேறினார்.



ஜிம்பாப்வே சார்பில் லூக் ஜாங்வே 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெஸ்லி மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதமடித்தார். அவர் 59 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில்7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனவே ஆட்டநாயகன் விருது ஹசன் அலிக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது மொகமது ரிஸ்வானுக்கு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News