உள்ளூர் செய்திகள்
இந்த ஆய்வின்போது பேரூர் கழக நர செயலாளர் சிவகுமார், ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், உட்பட மருத்துவமனை மருத்துவர்கள

அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

Published On 2022-01-12 10:40 GMT   |   Update On 2022-01-12 10:40 GMT
முசிறி அரசு மருத்துவமனையில் தியாகராஜன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. மேலும் முசிறியை சுற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பூச்சிக்கடி, பிரசவிக்கும் பெண்கள் என்பது உள்பட பல்வேறு சிகிச்சைகளுக்கு முசிறி அரசு மருத்துவமனையினை நாடி வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். 

இந்த அரசு மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன்  திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையின் அனைத்து பகுதியையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டார். மேலும் மருத்துவர்களிடம் ஆஸ்பத்திரிக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது மருத்துவர்கள், செவிலியர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கூறுகையில், கூடுதலாக செவிலியர்கள் வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள போதிய கூடுதல் பணியாளர்கள் வேண்டும்.  

மருத்துவமனையின் சுற்றுச்சுவர்கள் மிகவும் தாழ்வாக உள்ளதை உயர்த்தப்பட வேண்டும்,மேலும் நாள்தோறும் 500 முதல் 600 நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு போதிய இருக்கைகள் இல்லை. நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனை போக்க இருக்கைகள் ஏற்பாடு செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு வரும் நபர்களுக்கு போதிய அளவிலான குடிநீர் வசதி அமைத்து தரவேண்டும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர். 

கோரிக்கைகளை கேட்ட எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 
Tags:    

Similar News