செய்திகள்
கோப்புபடம்.

51.60 சதவீதம் வளர்ச்சி - சரிவில் இருந்து மீண்ட ஆயத்த ஆடை வர்த்தகம்

Published On 2021-10-16 09:29 GMT   |   Update On 2021-10-16 09:29 GMT
கொரோனா ஊரடங்கால் பாதிப்பை சந்தித்த இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தற்போது சரிவில் இருந்து மீண்டெழுந்து விட்டது.
திருப்பூர்:

நடப்பு நிதியாண்டின் (2021 - 22) முதல் அரையாண்டில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 51.60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் ரூ. 35 ஆயிரத்து 767 கோடிக்கு ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்தது. இந்த வர்த்தகம் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.54,225 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் பாதிப்பை சந்தித்த இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தற்போது சரிவில் இருந்து மீண்டெழுந்து விட்டது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 51.60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இது மகிழ்ச்சி அளிக்கிறது. 

சர்வதேச அளவில் பஞ்சு, சாயம் உட்பட ஆடை தயாரிப்பு மூலப்பொருட்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. வெளிநாட்டு வர்த்தகர் களிடம் ஆயத்த ஆடைகளுக்கு கூடுதல் விலை நிர்ணயித்து பெற வேண்டியது அவசியமாக உள்ளது என்றனர். 
Tags:    

Similar News