செய்திகள்
ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷரீப்

அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை - எங்களை தாக்கினால் போர் மூளும்

Published On 2019-09-20 00:31 GMT   |   Update On 2019-09-20 00:31 GMT
எங்கள் நாட்டை காப்பதற்கு நாங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்க மாட்டோம் என அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
துபாய்:

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணெய் வயல் ஆகியவற்றின்மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதற்கு ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றாலும்கூட, ஈரான்தான் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கிறது என்று அமெரிக்கா கூறுகிறது.

இந்த நிலையில் ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷரீப்பிடம், “சவுதியில் நடந்த தாக்குதலுக்காக அமெரிக்காவோ, சவுதியோ உங்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவு என்னவாக இருக்கும்?” என சி.என்.என். டெலிவிஷன் நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “ போர் மூளும். எங்கள் நாட்டை காப்பதற்கு நாங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்க மாட்டோம்” என பதில் அளித்தார். ஈரான் மந்திரியின் இந்தப் பதில், பாரசீக வளைகுடா பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News