செய்திகள்

போலிச் சான்றிதழ் வழங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடை

Published On 2019-06-20 12:47 GMT   |   Update On 2019-06-21 09:28 GMT
வயது சான்றிதழில் முறைகேடு செய்ததாக மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ராசிக் சலாம் இடம்பிடித்திருந்தார். 17 வயதேயான அவர், ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். பெரிய அளவில் விக்கெட்டுக்கள் வீழ்த்தாவிடிலும், அவரது பந்து வீச்சு மெச்சும் அளவிற்கு இருந்தது.

இதனால் கிரிக்கெட் விமர்சகர்கள் சலாமுக்கு சிறந்த வருங்காலம் உள்ளது என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வயது தொடர்பான சான்றிதழில் முறைகேடு செய்ததாக பிசிசிஐ அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இங்கிலாந்து தொடருக்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். தற்போது சலாமுக்குப் பதில் பிரபாத் மயுரா சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநில கல்வித்துறை ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதில் ‘‘கிரிக்கெட் சங்கத்திற்கும் வழங்கிய வயது தொடர்பான தகவலும், 10-ம் வகுப்பு படிக்கும்போது அவரது சான்றிதழில் இருந்த பிறந்த நாள் தேதியும் ஒத்துப்போகவில்லை’’ என்று தெரிவித்திருந்தது. இதனால் பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Tags:    

Similar News