செய்திகள்
கோப்பு படம்

பரோலில் விடுதலையில் உள்ள குற்றவாளிகள் உடனடியாக சிறைக்கு திரும்ப உ.பி. அரசு உத்தரவு

Published On 2020-11-20 13:42 GMT   |   Update On 2020-11-20 13:42 GMT
உத்தரபிரதேசத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறையில் இருந்த குற்றாவாளிகள் பலரை அம்மாநில அரசு பரோலில் விடுதலை செய்திருந்தது.
லக்னோ:

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தினமும் சராசரியாக 90 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகிவந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 40 ஆயிரம் என்ற அளவில் உள்ளது.

இதற்கிடையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் சிறைகளில் இருந்த குற்றவாளிகள் பலரை அம்மாநில சிறைத்துறை சிறப்பு பரோலில் விடுதலை செய்தது.

சிறை கைதிகளுக்கு கொரோனா பரவத்தொடங்கினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கத்தோடு குறைவான ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற குற்றவாளிகள் 2 ஆயிரத்து 314 பேரை உத்தரபிரதேச அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறப்பு பரோலில் விடுதலை செய்திருந்தது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததையடுத்து, சிறப்பு பரோலில் உள்ள குற்றவாளிகள் 2 ஆயிரத்து 314 பேரும் இன்னும் 3 நாட்களுக்குள் தங்கள் சிறைச்சாலைகளுக்கு வரும்படி உத்தரபிரதேச அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News