செய்திகள்
கோப்புபடம்

மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த 27000 மனுக்களுக்கு தீர்வு காணும் பணிகள் தீவிரம்

Published On 2021-06-07 06:14 GMT   |   Update On 2021-06-07 06:14 GMT
திருப்பூர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த 27 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் தனித்தனியாக பிரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அந்த மக்களுக்கு தான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாவட்டம் வாரியாக பெற்ற மனுக்களை தீர்வு காண தனியாக அதிகாரியை நியமித்து மனுக்களை அந்தந்த மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 27 ஆயிரம் மனுக்களை பொதுமக்கள் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து இருந்தனர். அந்த 27 ஆயிரம் மனுக்களும் சென்னையில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த மனுக்களை திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகா வாரியாக பிரித்து எடுக்கும் பணி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தொடங்கிநடைபெற்று வருகிறது.

வருவாய்த்துறை  அதிகாரிகள் தாலுகா வாரியாக மனுக்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக இலவச வீட்டுமனைபட்டா கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மனுவில்  மனுதாரரின் பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் சேகரித்து தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News