ஆன்மிகம்
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி.

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2020-12-22 03:32 GMT   |   Update On 2020-12-22 03:32 GMT
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் நாளான 24-ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 7-ம் நாளான 27-ந் தேதி சிறப்பு தாண்டவ தீபாராதனையும், 8-ம் நாளான 28-ந் தேதி கோவில் மணிமண்டபத்தில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 10-ம் நாளான 30-ந் தேதி அதிகாலையில் சித்திர சபையிலும், தொடர்ந்து குற்றாலநாதர் கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் உதவி ஆணையர் கண்ணதாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News