செய்திகள்
மதுராந்தகம் ஏரி

மதுராந்தகம் ஏரிக்கு பொதுமக்கள் செல்ல தடை - கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

Published On 2019-12-04 07:22 GMT   |   Update On 2019-12-04 07:22 GMT
மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் ஏரிப்பகுதியை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. பலத்த மழை காரணமாக மதுராந்தகம் ஏரி முழு கொள்ளவை எட்டி உள்ளது.

ஏரியின் மொத்த உயரம் 23.3 அடி. தற்போது ஏரியில் 22.4 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் ஏரிப்பகுதியை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஏரியின் கரையோர பகுதியான முள்ளி, வளர்பிறை, விழா மங்கலம் புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News