தொழில்நுட்பம்
கூகுள் பிக்சல் 5

விரைவில் இந்தியா வரும் பிக்சல் ஸ்மார்ட்போன்

Published On 2021-03-16 11:48 GMT   |   Update On 2021-03-16 11:48 GMT
கூகுள் நிறுவனம் விரைவில் புது பிக்சல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


கூகுள் நிறுவனம் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கான பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இது ஏற்கனவே இங்கு விற்பனையாகும் பிக்சல் 4ஏ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 



இந்தியாவில் பிக்சல் 4ஏ மாடலை விட பிக்சல் 5ஏ மாடலை இருமடங்கு அதிக யூனிட்களை கொண்டுவர இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்தது. பிக்சல் 5ஏ பற்றிய அறிவிப்பை தொடர்ந்து இதன் வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாகும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ஓரளவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். புது பிக்சல் போன் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என தெரிகிறது.
Tags:    

Similar News