பொது மருத்துவம்
இரத்தக் கொதிப்பா?... சிறுநீரகங்களை கவனியுங்கள்

இரத்தக் கொதிப்பா?... சிறுநீரகங்களை கவனியுங்கள்

Published On 2022-01-24 08:54 GMT   |   Update On 2022-01-24 08:54 GMT
நம்மில் பலர் அறியாத ஒன்று சிறுநீரகத்திற்கும், இரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொப்புள் கொடி உறவு. இரத்த கொதிப்பிற்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்த ஒரு உறுப்பு எது என்றால் அது சிறுநீரகமாகும்.
நம் இந்திய தேசமானது பல்வேறு துறைகளில் வியத்தகு முன்னேற்றம் அடைந்து வருவது உலகறிந்த உண்மையே. இந்த பரிணாம வளர்ச்சியின் விளைவாக நீரிழிவு நோயோடு சேர்ந்து இரத்தக் கொதிப்பு எனப்படும் அதிக இரத்த அழுத்த வியாதியும், நமது மக்களை அதிகம் பாதிக்கும் வியாதிகளாக உருவெடுத்து உள்ளன. இந்தியாவில் 25 சத வீத மக்கள் (20 கோடி) இரத்தக் கொழுப்பினால் பாதிப்பு அடைவதாக கூறப்படுகிறது.

பொதுவாக, சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுகளை இரத்தத்திலிருந்து வடிகட்டி சிறுநீராக வெளியனுப்பும் ஒரு சிறந்த உறுப்பு என்பது நாம் நன்கு அறிந்ததே. மேலும் அது இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது பல பேருக்கு தெரிவதில்லை. நீண்டகால உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்கள் சேதப்படுகின்றன.

இது சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு தேவையான இரத்த விநியோ கத்தைக் குறைக்கலாம். இதன் விளைவாக சிறுநீரக நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் சமீப காலமாக சிறுநீரக வியாதி, இரத்த சுத்திகரிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெகுவாக அதிகம் காணப்படு வதை நீங்கள் அறிவீர்கள். சர்க்கரை வியாதியும், இரத்தக் கொதிப்பும்தான் சிறுநீரக வியாதி அதிகமாகி வருவ தற்கு முக்கிய காரணிகள் ஆகும்.

பொதுவாக சர்க்கரை நோயை பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடையே நன்றாக அதிகரித்து உள்ளது. எனினும் நம்மில் பலர் அறியாத ஒன்று சிறுநீரகத்திற்கும், இரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொப்புள் கொடி உறவு. இரத்த கொதிப்பிற்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்த ஒரு உறுப்பு எது என்றால் அது சிறுநீரகமாகும்.

இதில் முக்கியமாக நாம் உணரவேண்டியது, இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் ஆரம்ப கால கட்டங்களி லேயே சிறுநீரகங்களை பரி சோதனை செய்து கொள்வது அவசியம். பல நேரங்களில் இரத்தக் கொதிப்பானது சிறு நீரக பிரச்சினை ஆரம்பமா வதற்கு அறிகுறியாக இருக்க லாம். குறிப்பாக இளம் வயதில் அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் சிறுநீரக பிரச்சினையானது, சரி செய்யும்போது இரத்தக் கொதிப்பும் எந்த மாத்திரையும் இன்றி முற்றிலும் குணமாக வாய்ப்பு உள்ளது.

ஆக, இரத்தக் கொதிப்பு, சிறுநீரக வியாதியின் அறிகுறியாகவும் இருக்க லாம். சிறுநீரக வியாதிக்கே மூல காரணமாகவும் இருக்கலாம் என்பதை உணர்ந்து இரத்தக் கொதிப்பு உள்ள அனைவரும் சிறுநீரக வல்லுநரின் ஆலோ சனையை பெறுவது நலம்.

Dr. ஜெ.பாலசுப்பிரமணியம் MD, DM, FRCP, FASN கிட்னி கேர் சென்டர் & கேலக்ஸி மருத்துவமனை, திருநெல்வேலி
Tags:    

Similar News