உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

பாதயாத்திரை பக்தர்களுக்கும் இரவு நேர ஊரடங்கு பொருந்தும்-துணை போலீஸ் கமிஷனர் பேட்டி

Published On 2022-01-06 10:29 GMT   |   Update On 2022-01-06 10:29 GMT
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கும் இரவு நேர ஊரடங்கு பொருந்தும் என நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கூறினார்.
நெல்லை:

நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் இன்று  நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகர பகுதிகளில் 3-வது அலையை எதிர்கொள்ள தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். மாநகர பகுதியில் 10 மணிக்கு மேல் பேரிகார்டுகள் கொண்டு சாலைகள் அடைக்கப்படும்.  எனவே பொதுமக்கள் இரவு நேர கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். 


மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கடைகளிலேயே வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்காக வெகு தூரம் செல்லக்கூடாது.


அதிகளவு தொற்றை தடுக்க பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க வேண்டும். பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்குள் குறிப்பிட்ட இலக்கை அடையும் வகையில் செல்ல வேண்டும். இந்த ஊரடங்கு அவர்களுக்கும் பொருந்தும். 


மாநகர பகுதிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 


கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News