ஆன்மிகம்
திருப்பதி கோதண்டராமசாமி கோவில்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் புஷ்ப யாகம் 19-ந்தேதி நடக்கிறது

Published On 2021-04-18 02:30 GMT   |   Update On 2021-04-17 06:55 GMT
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. 19-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. அதில் தினமும் மேற்கொள்ளப்பட்ட நித்ய கைங்கர்யத்தில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளுக்கு பரிகாரமாக புஷ்ப யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கோவிலில் 19-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது. அதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

19-ந்தேதி காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சீதா, லட்சுமணர், கோதண்டராமசாமிக்கு பல வண்ண மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம், மாலை 5.30 மணியளவில் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமசாமி கோவில் உள்ளேயே வலம் வருகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News