செய்திகள்
ஆம் ஆத்மி

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி 4 இடங்களில் வெற்றி

Published On 2021-03-03 21:17 GMT   |   Update On 2021-03-03 21:17 GMT
குஜராத் மாநகராட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க., டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் சோபிக்க தவறி விட்டது.
புதுடெல்லி:

டெல்லி மாநகராட்சியில் காலியாக இருந்து 5 வார்டுகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

குஜராத் மாநகராட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க., டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் சோபிக்க தவறி விட்டது. 5 வார்டுகளில் ஒரு வார்டை தன் வசம் வைத்திருந்த பா.ஜ.க. அதைக்கூட இந்த இடைத்தேர்தலில் தக்க வைக்கவில்லை. அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி வாகை சூடியது.

இந்த வெற்றிக்காக கட்சி தொண்டர்களை துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா பாராட்டி உள்ளார்.

இதையொட்டி அவர் கருத்து தெரிவிக்கையில், “மக்கள் பா.ஜ.க.விடம் சோர்ந்து போய் விட்டனர். அடுத்த ஆண்டு நடக்க உள்ள மாநகராட்சி தேர்தலில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் நேர்மையான அரசியல் நிர்வாகத்தை கொண்டு வருவார்கள்” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News