தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டை தொடர்ந்து ஐஓஎஸ் இயங்குதளத்திற்கும் பீம் செயலி அறிமுகம் செய்யப்பட்டது

Published On 2017-02-12 05:59 GMT   |   Update On 2017-02-12 05:59 GMT
மத்திய அரசின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள வழி செய்யும் பீம் செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தொடர்ந்து ஐஓஎஸ்-லும் பீம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றங்களை மேற்கொள்ள வழி பீம் செயலி மத்திய அரசு சார்பில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட பீம் செயலி, அறிமுகமான சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பீம் செயலி ஐஓஎஸ் இயங்குதளத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஐஓஎஸ் இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பீம் செயலி தற்சமயம் பாரதி ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், உள்ளிட்ட 35 வங்கிகளை சப்போர்ட் செய்கிறது. முதற்கட்டமாக ஐஎஸ்-ல் பீம் செயலி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் இயங்குகிறது. எனினும் பல்வேறு கூடுதல் மொழிகள் மற்றும் வங்கிகளின் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வெளியிடப்பட்ட பீம் செயலி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, குஜராத்தி, பெங்காலி, ஒடியா போன்ற மொழிகளில் கிடைக்கின்றது. 

ஐஓஎஸ் இயங்குதளத்திலும் பீம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பீம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிஜிட்டல் பரிமாற்றங்களை மேற்கொள்வது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News