செய்திகள்
பணம் பறிமுதல்

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ.3 லட்சம் சிக்கியது

Published On 2021-04-04 17:41 GMT   |   Update On 2021-04-04 17:41 GMT
அலமேலுமங்காபுரம் பகுதியில் ஒரு கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் நிலைகண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம் பகுதியில் ஒரு கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் நிலைகண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நிலை கண்காணிப்பு குழுவினர் அலமேலுமங்காபுரம் கொல்லைமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு அதிகாரிகளை பார்த்ததும் மர்மநபர் ஒருவர் தான் வந்த மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். சந்தேகமடைந்த அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

அதில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வாக்காளர் பட்டியல், ஒரு அரசியல் கட்சியின் துண்டு பிரசுரங்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தி வருகிறார். தொடர்ந்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்யப்பட்டது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News