உள்ளூர் செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்.

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 13 பேர் காயம்

Published On 2022-04-17 09:22 GMT   |   Update On 2022-04-17 09:22 GMT
ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 13 பேர் காயம் அடைந்தனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி வெள்ளைய-கவுண்டனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு ஊர் கவுண்டர் கோபால், ஊர் தர்மகர்த்தா சிவபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். மண்டலவடி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். எருது விடும் விழாவில் திருப்பத்-தூர், நாட்டறம்-பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 210 காளைகள் பங்கேற்றது. காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் பரிசோத-னைக்கு பிறகு காளைகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்-பட்டனர்.

இவ்விழாவில் ஒரு காளை ஒரு சுற்று மட்டுமே அனுமதிக்கப் பட்டது. மேலும் எருது விடும் விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளாமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் குறைந்த நேரத்தில் வேகமாக ஓடிய 41 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.55 ஆயிரமும் ஆலங்காயம் அடுத்த கொத்த கோட்டை பகுதியைச் சேர்ந்த காளையும், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த காளையும் ஒரே புள்ளி வேகத்தில் ஓடியதால் 2வது பரிசாக ரூ.44 ஆயிரமும், 3வது பரிசாக ரூ.33 ஆயிரமும் சேர்த்து 2 காளைகளுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது. 

இதனையடுத்து வெற்றிபெற்ற மற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 13 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் மூலம் அங்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது.

மேலும் இந்த விழாவில் வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News