வழிபாடு
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சூரிய வழிபாடு

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சூரிய வழிபாடு

Published On 2022-03-30 05:55 GMT   |   Update On 2022-03-30 05:55 GMT
திருப்பட்டூரில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 15, 16, 17-ந்தேதிகளில் பிரம்மபுரீஸ்வரர் மீது சூரியனின் ஒளிபடுவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.
திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 15, 16, 17-ந்தேதிகளில் பிரம்மபுரீஸ்வரர் மீது சூரியனின் ஒளிபடுவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.

அன்றைய தினங்களில் சூரிய வழிபாடு நடைபெறும். அதன்படி, நேற்று காலை 6 மணி அளவில் இருந்து 6.45 மணி வரை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிரம்ம சம்பத்கவுரி ஆகிய சாமிகளின் மீது சூரிய ஒளி விழுந்தது.

இதைத்தொடர்ந்து, பிரம்மா மற்றும் சம்பத்கவுரி ஆகிய சாமிகளுக்கு பாஸ்கரன் குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வணங்கினர். இந்த சூரிய வழிபாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News