ஆன்மிகம்
பால்குட ஊர்வலம்

வட்டன்விளை கோவில் கொடைவிழா: பால்குட ஊர்வலம் நடந்தது

Published On 2021-10-27 05:41 GMT   |   Update On 2021-10-27 05:41 GMT
வட்டன்விளை கோவில் கொடைவிழாவில் நாளை (அக்.28-ம் தேதி) காலையில் கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரர்களுக்கு வரி பிரசாதம் வழங்கல் ஆகியன நடைபெறும்.
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா கடந்த 24-ந் தேதி காலை 10 மணிக்கு வருசாபிஷேகத்துடன் தொடங்கியது. நண்பகல் 12 மணிக்கு புஷ்பாஞ்சலியும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்ததது.

நண்பகல் ஒரு மணிக்கு மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது, இரவு 7 மணிக்கு அய்யா வழிப் பாடகர் இளையபெருமாளின் பக்தி இன்னிசை, அக்.25-ந் தேதி பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 7 மணிக்கு கொரோனா என்ற கொடிய நோய் நாட்டை விட்டு முழுமையாக விலக வேண்டி பெண்கள் கலந்துகொண்ட 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் பாடல்களைப் பாடி வழிபாடு செய்தனர்.

இரவு 9 மணிக்கு வில்லிசையும், நடுஇரவு 12 மணிக்கு உஜ்ஜயினி மாகாளி அம்மன் சப்பர பவனியும் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு பால்குட ஊர்வலம் கோவில் வளாகத்தில் இருந்து வானவேடிக்கையுடன் புறப்பட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்தது. நாட்டில் வறுமை நீங்கிபசுமை வளர வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, கும்பம் தெரு வீதியுலா, இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு ஆலங்கார பூஜையும் சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகினார். தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது.

இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்குவில்லிசை நன்பகல் 12 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், கும்பம் வீதியுலா, இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜை, கரகாட்டம், இரவு 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, முத்தாரம்மன் பூஞ்சப்பர பவனியும், அக்.28-ஆம் தேதி காலையில் கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரர்களுக்கு வரி பிரசாதம் வழங்கல் ஆகியன நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News