செய்திகள்
முரளி விஜய்

விஜய் ஹசாரே டிராபி: ஜம்மு-காஷ்மீரை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு

Published On 2019-10-04 14:10 GMT   |   Update On 2019-10-04 14:10 GMT
ஜெய்ப்பூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ்நாடு.
விஜய் ஹசாரே டிராபியில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின.

டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் இக்பால் 67 ரன்களும், 5-வது வீரராக களம் இறங்கிய ஷுபம் பண்டிர் 66 ரன்களும், அடுத்து வந்த அப்துல் சமாத் 50 ரன்களும் அடிக்க ஜம்மு-காஷ்மீர் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் சேர்த்தது.

தமிழ்நாடு அணி சார்பில் சாய் கிஷோர், டி நடராஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணியின் அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முகுந்த் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து முரளி விஜய் உடன் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர்.

முரளி விஜய் 131 பந்தில் 117 ரன்கள் சேர்த்தார். பாபா அபரஜித் ஆட்டமிழக்காமல் 107 பந்தில் 86 ரன்கள் சேர்க்க தமிழ்நாடு 48 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 239 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை ருசித்துள்ளது.
Tags:    

Similar News