லைஃப்ஸ்டைல்
ஆலு மெது வடை

மொறு மொறு ஸ்நாக்ஸ் ஆலு மெது வடை

Published On 2020-09-21 09:26 GMT   |   Update On 2020-09-21 09:26 GMT
மெது வடை என்றால் யாருக்கேனும் பிடிக்காமல் இருக்குமா என்ன? இன்று ரொம்பவும் சுவையான ஆலு மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

உளுந்து - 100 கிராம்
உருளைக் கிழங்கு - 3
அரிசி மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
இஞ்சி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

உளுந்தினை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம். ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்துகொள்ளவும்.

அடுத்து மிக்சியில் உளுந்தினை சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து வேகவைத்த உருளைக் கிழங்கினையும் அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து, உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, உப்பு, அரிசி மாவு சேர்த்துவடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு மொறு மொறு என்று பொரித்து எடுத்து பரிமாறவும்.

இப்போது சூப்பரான மொறு மொறு ஆலு மெது வடை ரெடி!!

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News