தோஷ பரிகாரங்கள்
கண்ணப்பனார் கோவில்

காளஹஸ்தி செல்ல முடியாதவர்கள் பரிகாரம் செய்ய சிறந்த தலம்

Published On 2022-02-25 08:09 GMT   |   Update On 2022-02-25 08:09 GMT
திருவண்ணாமலை மலையைச் சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில், ஓரிடத்தில் மட்டும் இப்பெருமலையை ஒரு சிறு மலை மறைத்து நிற்கிறது. இந்த மலையில் கண்ணப்பனார் கோவில் இருக்கிறது.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில் பஞ்ச பூதத் தலங்களில் ஒன்று. இங்கு சிவபெருமானே, மலையாக வீற்றிருப்பதாக ஐதீகம். இந்த மலையைச் சுற்றிதான் கிரிவலப் பாதை அமைந்துள்ளது. 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த கிரிவலப் பாதையில், ஓரிடத்தில் மட்டும் இப்பெருமலையை ஒரு சிறு மலை மறைத்து நிற்கிறது. உண்ணாமுலையம்மன் பெயரில் இந்த சிறு மலை அழைக்கப்படுகிறது. சக்தி தனக்குள் சிவனை நிறுத்தி, மறைத்து வைத்திருக்கும் சூட்சுமம் நிறைந்ததாக இந்த இடம் ஆன்மிகவாதிகளால் போற்றப்படுகிறது.

இந்த மலையில் கண்ணப்பனார் கோவில் இருக்கிறது. ஒற்றைப் பாறையில் அமைந்த திருக்கோவில் இது. உள் கிரிவலப்பாதை முடியும் இடமாக இந்த பகுதி உள்ளது. ஆரம்ப காலத்தில் ரமண மகரிஷி இங்கு அடிக்கடி வந்து சென்றதாக சொல்கிறார்கள். இந்த ஆலயத்தின் கீழ் பகுதியில் ஒரு குகை உள்ளது. முன்காலத்தில் சித்தர்கள் பலரும் தவம் செய்த குகை இது என்கிறார்கள். திருவண்ணாமலை மலையில் பழங்காலத்தில் புலிகள் வாழ்ந்ததாகவும், சித்தர்கள் வாழ்ந்த இந்தக் குகைக்குள் புலிகள் நுழைவதில்லை என்பதால், இதற்கு ‘புலிப்புகா குகை’ என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

காளஹஸ்தி செல்ல முடியாதவர்கள், நாகதோஷம், ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலில் வந்து வழிபட்டால், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
Tags:    

Similar News