செய்திகள்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்ற போது எடுத்தப்படம்.

திருப்பூரில் அனுமதியின்றி இயங்கும் சாய ஆலைகளை மூட வேண்டும் - புதிய நிர்வாகிகள் பதவியேற்பு கூட்டத்தில் தீர்மானம்

Published On 2021-09-28 09:20 GMT   |   Update On 2021-09-28 09:20 GMT
மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தேர்தல் காதர் சலீமா மண்டபத்தில் நடந்தது. காலையில் ஓட்டுப்பதிவு நடந்த நிலையில்,மாலையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

இதில்புதிய தலைவராக காந்திராஜன், துணை தலைவர்களாக பக்தவத்சலம், ஈஸ்வரன், பொது செயலாளராக முருகசாமி, பொருளாளராக மாதேஸ்வரன், இணை செயலாளர்களாக செந்தில்குமார், சுதாகரன் வெற்றி பெற்றனர். 

தேர்தல் அதிகாரி வக்கீல் ராமமூர்த்தி, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

முன்னதாக 30-வது மகாசபை கூட்டம் நடந்தது. சங்க முன்னாள் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். 

கூட்டத்தில், மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்குவதற்கும், தொழில்முனைவோர் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் அளித்ததற்கும் நன்றி. தமிழக அரசு திருப்பூரில் அனுமதியின்றி இயங்கும் சாய ஆலைகளை முடக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு வழங்கிய வட்டியில்லாத கடனை மானியமாக மாற்றி அறிவிக்கவேண்டும். இதன்மூலம் சாய ஆலை துறையும், ஜீரோ டிஸ்சார்ஜ் சுத்திகரிப்பும் வளர்ச்சி பெறும். சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
Tags:    

Similar News