செய்திகள்
ஜிகே வாசன்

மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் போதே மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2021-05-27 06:15 GMT   |   Update On 2021-05-27 06:15 GMT
மத்திய, மாநில அரசுகள் காவிரிக்கு குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்ட முயற்சிக்கும் போதே தடை விதிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் காவிரியில் இருந்து தான் வருகிறது. இந்த தண்ணீரை எதிர் பார்த்துதான் லட்சகணக்கான ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது.

கர்நாடகாவில் மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளபட்டபோது எழுந்த எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வருகிறது. காவிரியில் வரும் தண்ணீர் மேகதாதுவில் தடுத்து நிறுத்தப்பட்டால், தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமே காவிரிதான். விவசாயமே தமிழர்களின் முதுகெலும்பு, எனவே விவசாயம், மக்களுடைய வாழ்வாதாரம், மற்றும் எதிர்காலத்திற்கும் எந்தவிதமான அச்சமும் ஏற்பட்டுவிடக் கூடாது. அதனால் தமிழகத்தில் உள்ள விவசாய இயக்கங்களும், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசியல்மாச்சிரியங்களுக்கு அப்பார்பட்டு செயல்பட்டு கர்நாடகாவின் திட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் காவிரிக்கு குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்ட முயற்சிக்கும் போதே தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News