செய்திகள்
ஈரான்

வெளிநாடுகளுக்கு தகவல் அனுப்பினர்- ஈரானில் 10 உளவாளிகள் கைது

Published On 2021-10-13 12:26 GMT   |   Update On 2021-10-13 13:05 GMT
2019-ம் ஆண்டில் நாட்டின் அணு மற்றும் ராணுவ தளங்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 17 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டனர்.


ஈரானின் புஷெர் மாகாணத்தில் அந்நாட்டு உளவுத்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு உளவு பார்த்து தகவல்களை அனுப்பினார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. கைதான 10 பேரும் ஈரானின் விரோத நாடுகளின் உளவு அமைப்புகளுடன் கூட்டாளிகளாகவும், பினாமிகளாகவும் செயல்பட்டு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டில் நாட்டின் அணு மற்றும் ராணுவ தளங்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 17 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு உளவு பார்க்கும் நபர்களை அந்நாட்டு அரசு அடிக்கடி கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நீட் தேர்வு விலக்கு மசோதா- கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Tags:    

Similar News