லைஃப்ஸ்டைல்
பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க...

பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க...

Published On 2020-12-15 03:24 GMT   |   Update On 2020-12-15 03:24 GMT
பிறந்த குழந்தையைக் குளிக்க வைப்பதில் ஏற்படும் குழப்பமும், சந்தேகமும் இன்றளவும் நிலவுகிறது. அதற்கான விடைதான் இந்தக் கட்டுரை.
பிறந்த குழந்தையைக் குளிக்க வைப்பதில் ஏற்படும் குழப்பமும், சந்தேகமும் இன்றளவும் நிலவுகிறது. அதில் ஒன்று தான் எந்த நேரத்தில் குளிக்க வைக்கலாம் என்பது..எனவே அதற்கான விடைதான் இந்தக் கட்டுரை.

குழந்தைகளை வெப்பமான நாட்களில் காலை 9-10 மணிக்குள் குளிப்பாட்டலாம். குளிர் நாட்கள், குளிர் பிரதேசங்களில் உள்ள குழந்தைகளை வெயில் வந்த பிறகு குளிக்க வைக்கலாம்.

அதேபோல் குழந்தையைக் குளிப்பாட்டும் முன்னர் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. குழந்தை குளிக்க வைத்த பிறகு பால் கொடுத்து தூங்க வைக்கலாம்.

அதேபோல் குழந்தையை தினமும் குளிப்பாட்டுவது நல்லது என்கின்றனர். குழந்தை பிறந்தவுடன் நாட்கள் செல்ல செல்ல அதன் தோல் உரிந்து புதிய தோல் தோன்றும். எனவே அதற்கு தினமும் குளிக்க வைத்து சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும் என கூறப்படுகிறது.

குளிர் நாட்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க வைக்கலாம். குளிக்க வைப்பது மட்டுமன்றி எண்ணெய் மசாஜ் அவசியம். எனவே எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிட்டுக் குளிக்க வைப்பது நல்லது. இதை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

எண்ணெய் தடவ செக்காடிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். அதேபோல் பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். எந்த எண்ணெயாக இருந்தாலும் அதைக் சூடாக்கி குழந்தையின் உடல் பொறுக்கும் இளஞ்சூட்டில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

அதேபோல் தண்ணீர் சூடாக இல்லாமல் குழந்தையின் உடல் பொறுக்கும் இளஞ்சூடாக இருக்க வேண்டும். 
Tags:    

Similar News