ஆன்மிகம்
சேவூரில் சக்கர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சேவூரில் சக்கர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-02-17 06:59 GMT   |   Update On 2021-02-17 06:59 GMT
ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் ஜெயின்தெரு அருகில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான சக்கர விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.
ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் ஜெயின்தெரு அருகில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான சக்கர விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு யாக சாலைகள், யாக மேடைகள் அமைக்கப்பட்டு 508 கலசங்களில் புனித நீர் நிரப்பி மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க இரண்டு கால யாக ஹோம பூஜைகளை நடத்தினர்.

யாக பூஜையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் குடும்பத்துடன் கலந்துகொண்டார். பின்னர் பூஜிக்கப்பட்ட கலசங்களுடன் கோவிலை வலம் வந்து கருவறை கோபுரத்திற்கும், முகப்பு கோபுரத்திற்கும், ஸ்ரீசக்கர விநாயகருக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு மகா அபிஷேகம் நடத்தினர்.
Tags:    

Similar News