ஆன்மிகம்
திருப்பதி

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் 22-ந்தேதி நடக்கிறது

Published On 2020-12-21 08:14 GMT   |   Update On 2020-12-21 08:14 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், 25-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து 11 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி ஆண்டுக்கு நான்கு முறை நடக்கிறது. அதாவது யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கும் நாளில் இருந்து முன்கூட்டியே வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பது வழக்கம்.

25-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து 11 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து இடங்களும், சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் கோவிலில் 5¾ மணிநேர சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. சுத்தம் செய்யும் பணி முடிந்ததும் பகல் 11.45 மணியளவில் பக்தா்கள் சாமி தரிசனம் ெசய்ய கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள், என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News