செய்திகள்
கார்த்திக் - குஷ்பு

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - வெட்கப்பட்ட டைரக்டர்

Published On 2021-10-23 12:06 GMT   |   Update On 2021-10-25 11:19 GMT
நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
வருஷம்-16
எத்தனை வருஷங்கள் கடந்தாலும் எனது திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க மிகச் சிறந்த  திரைப்படமாக இந்த படம் என்றும் பேசப்படும்.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்தது. அந்த அளவுக்கு  நானும் கார்த்திக்கும் மிகசிறப்பாக நடித்தோம்.
ஷூட்டிங் நேரத்தில் காட்சிகளில் இணைந்து நடிப்ப தோடு சரி, படப்பிடிப்பு முடிந்ததும் அந்த அரண்மனையை கொஞ்ச நேரமாவது சுற்றி பார்ப்பேன். அதன் அழகை பார்த்து பார்த்து ரசிப்பேன்.  அதன் வரலாற்றை கேட்டு வியந்து இருக்கிறேன்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்டிருக்கிறது. கேரள தலை நகர் திருவனந்தபுரத்தின் அருகில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நவராத்திரி மண்டபம், 4 அடுக்கு உப்பரிகை மாளிகை, சரஸ்வதி அம்மன்கோவில், மன்னர் மந்திர ஆலோசனை செய்யும் இடம், நாடகசாலை என்று ஒவ்வொன்றும் அந்த காலத்திலேயே கச்சிதமாக  வடிவமைத்து இருப்பது பிரமிக்க வைக் கிறது.
மன்னரின் படுக்கை அறை. அதில் அமைந்துள்ள மூலிகை மரங் களினால் செய்த மரக்கட்டில், சுவர்களில் பொருத்தி வைக்கப் பட்டுள்ள ஆயுதங்கள் அடேயப்பா... பிரமாதம்.

மற்றொரு தளத்தில் மன்னர் படிப்பதற்கும், உபவாசம் செய் வதற்கும் தனித்தனி அறைகள் உள்ளன. பூஜை அறையும், அரண்மனை உச்சியில் வைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது.

காலங்களை கடந்தும் கண்களுக்கு விருந்தளிக்கும் அந்த  அரண்மனையையும்,  சுற்றுப்பகுதிகளையும் பார்த்து ரசித்ததால் தானோ என்னவோ டைரக்டர் பாசில் சாரும் தனது காமிரா கண்களால் ரசிகர்களுக்கு விருந்து படைத்துவிட்டார்.

அந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும், பாடல்களும் என்றும் ரசிக்கும்படி அமைந்தது. மேலும் அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. அந்த பகுதிகளின் இயற்கை அழகு அருமை. எங்கு பார்த்தாலும் நீர் நிரம்பியும், பசுமையாகவும் இருந்ததை பார்த்ததால் நடிக்கும் போது அது எனக்கு புது உற்சாகத்தை தந்தது என்பதும் உண்மை.

அதேபோல் அந்த படப்பிடிப்பில் நடந்த சில நிகழ்வுகள் என்றும்  மறக்க முடியாதவை. இன்று நினைத்தாலும் சில அனுபவங்களும், உணர்வுப்பூர்வமான சில நிகழ்வுகளும் என்றும் நினைத்துப் பார்க்க வைக்கும்.

படத்தின் டைரக்டரான பாசில் சார் தமிழிலும், மலையாளத்திலும் புகழ்பெற்ற டைரக்டர். அது மட்டுமல்ல அவரு டைய பண்பு மிகவும் மெச் சத்தக்கது.  எப்போதுமே அதிர்ந்து பேசமாட்டார். ஆனால் அவருடைய சொல்லும், செயலும் அவர் கடைபிடிக்கும் பண் பாட்டின் வெளிப் பாடாகவே இருக்கும்.

அதற்கு ஒரே ஒரு நிகழ்வை சொல்ல முடியும். வருஷம்-16 படப்பிடிப்பில் பத்ம நாபபுரம் அரண் மனையை சுற்றி சுற்றி நான் ஓடிக்கொண்டு இருப்பேன். என்னை கதாநாயகன் கார்த்திக் துரத்திக் கொண்டு வருவார். ஒருகட்டத்தில் இருவரும் மோதிக் கொண்டு அதில் நான் கீழே விழ வேண்டும்.  சரியாகத்தான் ஓடி னோம். சரியாகத்தான் முட்டிக்கொண்டோம். சொன்னபடியேதான் கீழேயும் விழுந்தேன். ஆனாலும் கட் கட் என்றார். மீண்டும் ரீடேக் என்றார். இப்படியே ஆறேழு முறை ரீடேக், ரீடேக் என்றே எடுத்துக் கொண்டு இருந்தார். எனக்கு கடுப்பாகிவிட்டது. கார்த்திக்குக்கும் ஒன்றும் புரிய வில்லை. நன் றாகத் தானே நடித்தோம்? நீங் கள் சொன்னபடி தானே நடித் தோம்? நீங்கள் ஏன் மீண்டும், மீண்டும் எடுத் துக் கொண் டிருக்கிறீர்கள் என்று நான்  நேரடியாகவே கேட்டேன். ஆனால் அவர் எதுவும் சொல்ல வில்லை. இன்னும் ஒரு வாட்டி டிரை பண்ணுங்கள் என்று மீண் டும் எடுத்தார். ஆனாலும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.

மீண்டும் எடுக்க வேண்டும் என்றார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கார்த்திக் நேரடியாகவே போய் கேட்டு இருக்கிறார். அப்போது அவர் சொன்ன விஷயம்தான் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இப்படியும் ஒரு டைரக்டர் இருக்கிறாரே என்று அவரை நினைத்து பெருமைப்பட்டேன்.

அதாவது நான் கார்த்திக் சாருடன் மோதி கீழே விழும் போது நான் அணிந்திருந்த குட்டைப்பாவாடை எனது மூட்டு வரை விலகி இருக்க வேண்டும். ஆனால் அது மூட்டுக்கு மேல் விலகி இருக்கிறது இதுதான் காரணம். ஒவ்வொரு முறையும் அப்படியேதான் பாவாடை மூட்டுக்கு மேல் விலகி இருக்கிறது. அதை நேரடியாக என்னிடம் சொல்வதற்கு அவருக்கு கூச்சம், தயக்கம். அதனால்தான் மீண்டும் மீண்டும் எடுத்து இருக்கிறார். ஆனாலும் சரிவரவில்லை. இதை கார்த்திக் கேட்டதும் சொல்லி இருக்கிறார். இந்த விசயத்தை நான் எப்படி அந்த பெண்ணிடம் நேரடியாக சொல்வது! அந்த பெண்ணிடம் சொல்லி கீழே விழும்போது மூட்டுவரை மட்டுமே பாவாடையை விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்ள சொல் என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகு கார்த்திக் என்னிடம் வந்து விபரத்தை  சொன்னார். அடுத்த டேக்கில் காட்சி ஓகே ஆகிவிட்டது.

காட்சி கிளாமராக இருந்தால்  கமர்ஷியலாக வியாபாரம் ஆகும் என்று தான் பொதுவாக நினைப்பார்கள். விரும்புவார்கள். ஆனால் பாசில் சார் அப்படி கிடையாது. எல்லாவற்றுக்கும் ஒரு லிமிட் வைத்திருப்பார். எக்காரணத்தை கொண்டும் எந்த சூழ் நிலையிலும் அந்த லிமிட்டை தாண்ட அனுமதிக்க மாட்டார்.

அவர் கடை பிடித்து வந்த அந்த கட்டுப் பாடும், நற்பண்புகளா லும்  தான் திரை உல கில் அவரது படம் என் றால் அதற்கு தனி பெயர் இருந்தது.

அவரது படத்தில் நடித்தது. அவருடன் பழகியது எல்லாமே மறக்கமுடியாத தரு ணங்கள். என்றும் நினை வில் இருக்கும்.
நான் போற்றி மதிக் கும் டைரக்டர்களில் பாசில் சாரும் ஒருவர்.

இப்படியாக கன்னி யாகுமரி மாவட்டத்தில் படப்பிடிப்பு முடிந்து  அனைவரும் சென்னை திரும்பினோம். குறிப் பிட்ட நேரத்தில் வருஷம் 16 திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.  காதுக்கு இனிய இசை, கண்ணுக்கு இதமான காட்சிகள், அற்புதமான கதை அம்சத்துடன் இருந்ததால் வருஷம்-16 படத்தை தமிழ் ரசிகர்கள் சந்தோசத்துடன் கொண்டாடினார்கள். அது  வெற்றிப் படமாக அமைந்ததில் எனக்கும் மிகுந்த சந்தோசம்.

குஷ்பு, கார்த்திக் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு எங்கள் ஜோடி  பொருத்தம்  பேசப்பட்டது. அதே போல் இருவரும்  இணைந்து மிகச்சிறப்பாக நடிக் கவும் செய்தோம். அதே நேரத்தில் நிஜ வாழ்க் கையில் எங்களுக்குள் மிகப்பெரிய சண்டையும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. அது ஏன்? எதற்காக?
Tags:    

Similar News