ஆன்மிகம்
சிவன்

கேட்டை நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

Published On 2020-08-24 05:29 GMT   |   Update On 2020-08-24 05:29 GMT
புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம:
சிவாய அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம:
சிவாய கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

பொருள்: பக்தர்கள் கோருவதைக் கொடுப்பவரும், யாகம் இயற்றுபவர்களைக் காப்பவரும், ரிஷபக் கொடியோனும், வெள்ளியைத் தோற்கடிக்கும் பேரொளி மிக்க உடலை உடையவரும், வீட்டில் உண்டாகும் துயரங்களை எல்லாம் அடியோடு தொலைப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
Tags:    

Similar News