ஆட்டோமொபைல்

2018 ஹோன்டா சி.பி.ஆர். 250ஆர் விலை அறிவிக்கப்பட்டது

Published On 2018-03-20 10:19 GMT   |   Update On 2018-03-20 10:19 GMT
ஹோன்டா சி.பி.ஆர். 250ஆர் மோட்டார்சைக்கிள் மாடல்களின் இந்திய விலை அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சி.பி.ஆர். 250ஆர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதன் விலை குறித்த விவரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. 

ஹோன்டா சி.பி.ஆர். 250 ஆர் மாடலில் கிராஃபிக்ஸ், புதிய நிறம் மற்றும் ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. டூயல் ஹெட்லேம்ப் கொண்ட புதிய மோட்டார்சைக்கிளில் ஹோன்டா பழைய வடிவமைப்பை வழங்கியுள்ளது. 2017-ம் ஆண்டில் BS-IV விதிமுறைகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து சி.பி.ஆர். 250 ஆர். விற்பனை நிறுத்தப்பட்டது. 

புதிய 2018 சி.பி.ஆர். 250ஆர் மாடலில் ஃபுல்-எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் பொசிஷன் லேம்ப் வழங்கப்பட்டிருக்கிறது. 2018 மாடல்: மார்ஸ் ஆரஞ்சு மற்றும் ஸ்டிரைக்கிங் கிரீன் என இரண்டு வித நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் பியல் ஸ்போர்ட்ஸ் எல்லோ, ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் ஸ்பெஷல் எடிஷன் ரெப்சல் ஹோன்டா பெயின்ட் பதிப்புகளும் விற்பனைக்கு வரயிருக்கின்றன.



மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை புதிய சி.பி.ஆர். 250ஆர் மாடலில் 249.6சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கபப்ட்டுள்ளது. இந்த இன்ஜின் 26 பி.ஹெச்.பி. பவர், 22.9 டார்கி.யூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதே இன்ஜின் ஹோன்டாவின் முந்தைய சி.பி.ஆர். 250 மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர 2018 சி.பி.ஆர். 250ஆர் மாடலில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ப்ரோ-லின்க் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் 296மில்லிமீட்டரும், பின்புறம் 220மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. 2018 சி.பி.ஆர். 250 ஆர் மாடலில் டூயல்-சேனல் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) வழங்கப்பட்டுள்ளது.

2018 ஹோன்டா சி.பி.ஆர். 250ஆர் ஸ்டேன்டர்டு வேரியண்ட் விலை ரூ.1.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி), ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வேரியண்ட் விலை ரூ.1.93 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News