ஆன்மிகம்
திருஏடு வாசிப்பு

சரல் நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு இன்று தொடங்குகிறது

Published On 2020-11-20 07:31 GMT   |   Update On 2020-11-20 07:31 GMT
வெள்ளிச்சந்தை அருகே பேயோடு, சரல் நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருவிழா மற்றும் திருஏடு வாசிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது.
வெள்ளிச்சந்தை அருகே பேயோடு, சரல் நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருவிழா மற்றும் திருஏடு வாசிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் இன்று காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 7 மணிக்கு பக்தி கானம், மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 9.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை ஆகியவை நடக்கிறது.

திருஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியில் கோவில் தலைவர் அய்யாத்துரை முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியை வெள்ளிமலை இந்து தர்மவித்யாபீடம், குருந்தன்கோடு ஒன்றிய துணை அமைப்பாளர் பிரகலாதன் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் அய்யாவுக்கு பணிவிடை, மாலையில் திருஏடு வாசிப்பு, இரவு அய்யாவுக்கு பணிவிடை போன்றவை நடைபெறும்.

வருகிற 27-ந் தேதி இரவு 9 மணிக்கு திருகல்யாணஏடு வாசிப்பும், 29-ந் தேதி இரவு 11 மணிக்கு சாமி அலங்கார வாகனத்தில் பவனி வருதல், வாணவேடிக்கை போன்றவையும் நடக்கிறது. 30-ந் தேதி மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு, 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News