செய்திகள்
முட்டை

நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் குறைப்பு

Published On 2021-09-23 05:13 GMT   |   Update On 2021-09-23 05:13 GMT
புரட்டாசி மாதத்தில் முட்டை மற்றும் அசைவ உணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் முட்டை விற்பனையை அதிகரிக்க விலையில் மாற்றம் செய்ய கோழிப்பண்ணையாளர்கள் முடிவு செய்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழகம், கேரளா மாநிலத்துக்கு விற்பனை செய்தது போக, மீதமுள்ள முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அரசின் சத்துணவு திட்டத்துக்கும் இங்கிருந்து முட்டை சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் புரட்டாசி மாதத்தில் முட்டை மற்றும் அசைவ உணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் முட்டை விற்பனையை அதிகரிக்க விலையில் மாற்றம் செய்ய கோழிப்பண்ணையாளர்கள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.55 ஆக இருந்த முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை வருமாறு:-

சென்னை ரூ.4.65, பர்வாலா ரூ. 4.26, பெங்களூர் ரூ. 4.65, டெல்லி ரூ.4.55, ஹைதராபாத் ரூ.4.26, மும்பை ரூ. 4.75, மைசூர் ரூ.4.65, விஜயவாடா ரூ.4.38, ஹொஸ்பேட் ரூ.4.25, கொல்கத்தா ரூ.4.93.

பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.125 ஆகவும், முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.85 ஆகவும் பண்ணையாளர்கள் நிர்ணயித்துள்ளனர்.
Tags:    

Similar News