ஆன்மிகம்
அன்னை ஶ்ரீகாமாட்சியம்மன் கோவில் கொடியேற்றம் நடைபேற்ற போது எடுத்த படம்.

வால்பாறையில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது

Published On 2021-02-21 07:36 GMT   |   Update On 2021-02-21 07:36 GMT
வால்பாறையில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் அன்னை ஶ்ரீ காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 53-ம் ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நெய்வேத்திய பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடத்தப்பட்டு பல்வேறு கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து காமாட்சி அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது.

27-ந் தேதி கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காமாட்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறுகிறது.

பின்னர் வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சீர்வரிசைகளுடன் ஏகாம்பர ஈஸ்வரர் மாப்பிள்ளை அழைத்து வந்து ஸ்ரீ அன்னை காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மாவிளக்கு எடுத்து வால்பாறையின் முக்கிய வீதிகள் வழியாக அன்னை ஶ்ரீகாமாட்சியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாகமிட்டியினர் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News