ஆட்டோமொபைல்
ஓலா சீரிஸ் எஸ் மற்றும் சிம்பில் ஒன் ஸ்கூட்டர்

ஓலா சீரிஸ் எஸ் மற்றும் சிம்பில் ஒன் - எது சிறந்தது?

Published On 2021-08-23 05:25 GMT   |   Update On 2021-08-23 05:46 GMT
இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் அறிமுகமாகி இருக்கும் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஓலா எலெக்ட்ரிக் மற்றும் சிம்பில் எனர்ஜி நிறுவனங்கள் ஒரே தினத்தில் தங்களின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தன. முன்பதிவில் இரு மாடல்களும் அமோக வரவேற்பை பெற்று வருகின்றன. ஓலா சீரிஸ் எஸ் இரண்டு வேரியண்ட்களிலும், சிம்பில் ஒன் மாடல் ஒற்றை வேரியண்டிலும் கிடைக்கின்றன. 

இந்த நிலையில், இரு நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்கள், அவற்றின் ரேன்ஜ், விலை உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 

அம்சங்கள்:

ஓலா எஸ் 1 சீரிஸ் மற்றும் சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த சில புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 



ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டி.எப்.டி. எல்.சி.டி. ஸ்கிரீன் உள்ளது. இது ரேன்ஜ், நேவிகேஷன் மற்றும் கனெக்டெட் தொழில்நுட்பம் சார்ந்த விவரங்களை காண்பிக்கிறது. இத்துடன் ஹில் ஹோல்டு அசிஸ்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

சிம்பில் ஒன் மாடலில் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது 4ஜி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதில் மியூசிக், கால் கண்ட்ரோல், வெஹிகில் டிராக்கிங், நேவிகேஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

பேட்டரி மற்றும் மோட்டார்:

ஓலா எஸ்1 மாடலில் 2.98 kWh பேட்டரி பேக் உள்ளது. இது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம், 121 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த மாடல் நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

எஸ்1 ப்ரோ மாடலில் - நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. இதில் 3.97 kWh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்கிறது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 



சிம்பில் ஒன் மாடலில் 4.5 kW மோட்டார் உள்ளது. இது 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதில் முன்புறம் 100 செக்‌ஷன், பின்புறம் 110 செக்‌ஷன் டையர்கள் உள்ளன. இதன் 100 செக்‌ஷன் டையர் கொண்ட மாடல் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்திலும் 110 செக்‌ஷன் டையர் கொண்ட மாடல் மணிக்கு அதிகபட்சம் 98 கிலோமீட்டர் வேகத்திலும் செல்கிறது.

சிம்பில் ஒன் ஸ்கூட்டர் - இகோ, ரைடு, டேஷ் மற்றும் சோனிக் என நான்கு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 203 கிலோமீட்டர் வரை செல்லும். 

விலை விவரம்:

ஓலா சீரிஸ் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 99,999 என துவங்குகிறது. இதன் எஸ்1 ப்ரோ விலை ரூ. 1.29 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிம்பில் ஒன் மாடல் விலை ரூ. 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Tags:    

Similar News