லைஃப்ஸ்டைல்
நேர நிர்வாகத்தில் சிறந்தவர்கள் பெண்களே

நேர நிர்வாகத்தில் சிறந்தவர்கள் பெண்களே

Published On 2021-04-28 08:27 GMT   |   Update On 2021-04-28 08:27 GMT
பணிக்கு செல்லும் பெண்கள் இன்னும் கூடுதலாக நேர நிர்வாகத்தை கடைப்பிடிக்கின்றனர். பணியிடத்துக்கு ஒரு நாளும் தாமதமாக போகாமல் முன்கூட்டியே செல்வதையும் பார்க்கலாம்.
பெண்கள் தங்களை அலங்கரித்து கொள்ள அதிக நேரம் எடுத்து கொள்கிறார்கள் என்பது ஆண்களின் பொதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். அலங்காரம் செய்வதற்கு பெண்ணுக்கு நேரம் தேவைதான். கூந்தலை வாரி பூவைத்து, பொட்டு வைத்து உடைகளை தேர்வு செய்து அதற்கேற்ப அணிகலன்களை அணிந்து தயாராகி வருதவற்கு பெண்கள் தாமதம் செய்வதால் கணவன் கூட்டம் பொறுமையிழக்கின்றது.

ஆனால் உண்மையில் பெண்கள்தான் நேர நிர்வாகத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

காலையில் எல்லோரையும் விட பெண்கள் தான் முதலில் கண் விழிக்கிறாள். இரவில் அவள் தான் கடைசியாக கண்ணுறங்குகிறாள்.

சினிமா, ரெயில் என்று செல்லும போது அவளுக்கு நேரத்தை பற்றிய சிந்தனை இல்லாமல் இல்லை. மருத்துவரிடம் செல்வது வங்கி போன்ற குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வது என்று பெண் தனக்குள் ஒரு கடிகாரத்தை மனதுக்குள் ஒடவிட்டபடிதான் இருக்கிறாள். பள்ளியில் குழந்தைகளை விட்டு வருவதிலும், அழைத்து வருவதிலும் பெண்கள் அனைவரும் அற்புதமான நேர நிர்வாகத்தை கடைப்பிடிக்கின்றனர்.

குடும்பத்தினருக்கு சமையத்து போடுவதும், அவர்கள் தேவை அறிந்து உணவு பரிமாறுவதும் பெண்களின் நேர நிர்வாகத்துக்கு சிறந்த சான்று.

பணிக்கு செல்லும் பெண்கள் இன்னும் கூடுதலாக நேர நிர்வாகத்தை கடைப்பிடிக்கின்றனர். பணியிடத்துக்கு ஒரு நாளும் தாமதமாக போகாமல் முன்கூட்டியே செல்வதையும் பார்க்கலாம்.

ஆண்களில் சிலர் தங்களுக்கு நேரமே இல்லை. பிஸியாக இருக்கிறேன் என்று கூறி நேர நிர்வாகத்தை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டுவார்கள். பெண்கள் அப்படியில்லை. கடிகாரத்தின் ஒவ்வொரு மணித்துளியிலும் தான் செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து தான் செயல் படுகிறார்கள்.

எனவே கணவரும், குடும்பத்தினரும் வீட்டை நிர்வகிக்கும் பெண்ணுக்கு தோள் கொடுத்து நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்தினால் வாழ்வில் முன்னேறலாம்.
Tags:    

Similar News