செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா நோயாளிகளுக்கான 1,580 படுக்கைகள் காலி

Published On 2021-06-10 23:30 GMT   |   Update On 2021-06-10 23:30 GMT
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்தனர்
திருச்சி:

வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா நோயாளிகளின் படுக்கைகள் வேகமாக காலியாக வருகிறது. நேற்று ஒருநாள் பலி 8 ஆக குறைந்தது.

திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 470 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 63,784 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 7,232 பேர் உள்ளனர். 1,109 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 55,828 ஆகும்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்தது. கடந்த 2 வாரத்திற்கும் மேலாக இரட்டை இலக்கத்தில் இருந்து வந்த பலி எண்ணிக்கை தற்போது ஒற்றை இலக்கத்துக்கு குறைந்து விட்டது.

திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் வீடு திரும்பி வருவதால், படுக்கைகளும் அதிக அளவில் காலியாக உள்ளன.

மொத்தம் உள்ள 2,043 ஆக்சிஜன் படுக்கைகளில் 1,508 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால், 541 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் மொத்தம் உள்ள 446 படுக்கைகளில் 370 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, அங்கு 76 படுக்கைகள் காலியாக உள்ளன. சாதரண படுக்கைகள் மொத்தம் 1,597 ஆகும். அவற்றில் 584 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு தற்போது 963 படுக்கைகள் காலியாக உள்ளன. மொத்தம் 1,580 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News